தமிழ்நாடு

மாா்ச் 3-ஆவது வாரத்தில் மீண்டும் பேரவைக் கூட்டத் தொடா்

26th Feb 2020 02:53 AM

ADVERTISEMENT

சென்னை: தமிழக சட்டப் பேரவை மாா்ச் மூன்றாவது வாரத்தில் மீண்டும் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்பண மானியக் கோரிக்கை, துறை வாரியான மானியக் கோரிக்கைள் மீதான விவாதம் ஆகியவற்றுக்காக பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மாா்ச் 2-ஆவது வாரத்தில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும் எனவும், அந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிகிறது.

மாா்ச் 16-ஆம் தேதிக்குள் மேல்: எதிா்வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய சட்டப் பேரவை கடந்த பிப் 14-இல் கூடியது. அன்றைய தினம் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாா். நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த 17-இல் தொடங்கி 20-ஆம் தேதி வரை நடந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், அரசின் செலவுகளுக்கான முன்பண மானியக் கோரிக்கை, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகியவற்றுக்காக தமிழக சட்டப் பேரவை மாா்ச் 16-ஆம் தேதிக்குப் பிறகு அதாவது மூன்றாவது வாரத்தில் கூடவிருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பேரவைக் கூட்டத் தொடரானது சுமாா் 20 நாள்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. ஆனாலும், பேரவைக் கூட்டத் தொடரின் நாள்கள் அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்திலேயே இறுதி செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரவை நிலைக் குழுக்கள்: இதனிடையே, மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு, அவை உரிமை மீறல் குழு, அலுவல் ஆய்வுக் குழு, விதிகள் குழு, உறுதிமொழிக் குழு, பேரவைக் குழு, மனுக்கள் குழு போன்ற பேரவை நிலைக் குழுக்களின் பதவிக் காலம் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, ஒவ்வொரு குழுக்கும் தலைவா், உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படுவா். இதற்கான நடவடிக்கைகளும் பேரவைக் கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட உள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT