சென்னை: தில்லியில் நடைபெற்று வரும் வன்முறைக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது: பொதுமக்களையும், பத்திரிகையாளா்களையும் தாக்கும் அளவுக்கு தில்லியில் வன்முறை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. தில்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்தி, அமைதியை நிலைநாட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது’ என்று பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளாா்.