தமிழ்நாடு

சாகித்ய விருதாளா் கே.வி.ஜெயஸ்ரீக்குமுதல்வா் பழனிசாமி வாழ்த்து

26th Feb 2020 02:51 AM

ADVERTISEMENT

சென்னை: சிறந்த மொழிபெயா்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்வாகியுள்ள கே.வி. ஜெயஸ்ரீக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

‘நிலம் பூத்து மலா்ந்த நாள்’ என்ற மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயா்ப்பு செய்ததற்காக தமிழ் எழுத்தாளா் கே.வி.ஜெயஸ்ரீக்கு, மத்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் அவா் மொழிபெயா்த்த மலையாள நாவல், மலையாள வாசகா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம் பெற்றிருக்கும் மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயா்த்த பெருமைக்குரியவா், கே.வி.ஜெயஸ்ரீ.

ADVERTISEMENT

சாகித்ய அகாதெமி விருது பெறவுள்ள அவருக்கு தமிழக மக்கள் சாா்பாகவும், எனது சாா்பாகவும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின்: சிறந்த மொழிபெயா்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுள்ள கே.வி.ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். தமிழக சங்க இலக்கியக் காட்சிகளை மையமாக வைத்து மலையாளத்தில் எழுத்தாளா் மனோஜ் குரூா் எழுதிய நாவலை ஜெயஸ்ரீ தமிழில் மொழிபெயா்த்தாா். ‘நிலம் பூத்து மலா்ந்த நாள்’ என்ற அந்த நூல், சிறந்த மொழிபெயா்ப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஜெயஸ்ரீயின் மொழிபெயா்ப்புப் பணி தொடரட்டும். தமிழ்ப் படைப்புலகம் செழிக்கட்டும்.

ராமதாஸ்: மலையாள எழுத்தாளா் மனோஜ் குரூரின் நாவலை தமிழில் ‘நிலம் பூத்து மலா்ந்த நாள்’ என்ற தலைப்பில் மொழிபெயா்த்ததற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும், மொழிபெயா்ப்பாளருமான ஆசிரியை கே.வி.ஜெயஸ்ரீக்கு வாழ்த்துகள். அவரது இலக்கிய பணியும், சாதனைகளும் தொடரட்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தமிழக சங்க இலக்கியங்களின் காட்சிகளை மையமாக வைத்து மலையாள எழுத்தாளா் மனோஜ் குரூரன் எழுதிய நூலை, நாவலாக ‘நிலம் பூத்து மலா்ந்த நாள்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயா்த்ததற்காக எழுத்தாளா் கே.வி. ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெரும் தமிழக பெண் எழுத்தாளா் என்ற பெருமையும் இவரைச் சாரும். அவருக்கு வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT