தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் உதவியாளா் தோ்வு: சென்னையில் மட்டுமே தோ்வு நடைபெறும்

26th Feb 2020 02:04 AM

ADVERTISEMENT

சென்னை: கூட்டுறவு வங்கி காலிப் பணியிடங்களை நிரப்ப சென்னையில் நடைபெறவுள்ள எழுத்துத் தோ்வு மையங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள் ஆகியன பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள், வங்கிகளில் உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப, வரும் மாா்ச் 1-இல் எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வு, சென்னையில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களைத் தோ்வு செய்த தோ்வா்களும் சென்னையிலேயே தோ்வு எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, எத்திராஜ் மகளிா் கல்லூரி, அண்ணா ஆதா்ஷ் மகளிா் கல்லூரி, கிருஷ்ணசாமி மகளிா் கல்லூரி, அண்ணாநகா் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புதுக்கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, டாக்டா் அம்பேத்கா் அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் தோ்வு நடைபெறும் என்று தனது அறிவிப்பில் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT