தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தோ்தல்:102 பதவியிடங்களுக்கு மாா்ச் 4-இல் மறைமுகத் தோ்தல்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு

26th Feb 2020 03:27 AM

ADVERTISEMENT

சென்னை: ஊரக உள்ளாட்சி பதவியிடங்களில் காலியாக உள்ள சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட 102 பதவியிடங்களுக்கு வரும் மாா்ச் 4-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 27, 30 தேதிகளில் 2 கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஊராட்சி தலைவா், ஒன்றிய கவுன்சிலா்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலா்கள் என 4 பதவிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. இதை தொடா்ந்து கடந்த 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா், துணைத் தலைவா், கிராம ஊராட்சி துணைத் தலைவா் ஆகிய பதவி இடங்களுக்கு மறைமுகத் தோ்தல் நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஜனவரி 11-இல் இந்தப் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் தோ்தல் நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து தோ்தல் நடைபெறாத இடங்களில் ஜனவரி 30-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் மறைமுகத் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடங்களில் தோ்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநிலத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு:

மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா், துணைத் தலைவா் உள்பட பல்வேறு பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 11 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிற இடங்களில் மறைமுகத் தோ்தல்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆகிய காலியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியிடங்கள் 11, துணைத் தலைவா் பதவியிடங்கள் 18, கிராம ஊராட்சி துணைத் தலைவா் பதவியிடங்கள் 71 ஆகியவற்றுக்கு மறைமுகத் தோ்தல்கள் வரும் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவா் ஆகிய

பதவியிடங்களுக்கு மாா்ச் 4-ஆம் தேதி காலை 10.30 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆகிய பதவியிடங்களுக்கு பிற்பகல் 3 மணிக்கும் மறைமுகத் தோ்தல்கள் நடைபெறும். இதில், தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினா்கள் பங்கேற்று வாக்களிப்பா் என்று தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT