தமிழ்நாடு

இலங்கை மீது நடவடிக்கை தேவை: பழ.நெடுமாறன்

26th Feb 2020 03:36 AM

ADVERTISEMENT

சென்னை: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீா்மானத்திலிருந்து விலகியுள்ள இலங்கையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: ஐ.நா. மனித உரிமை ஆணையம் 2015-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் நிறைவேற்றிய தீா்மானத்திலிருந்து விலக இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக பிரதமா் மகிந்த ராஜபட்ச அறிவித்திருக்கிறாா்.

இலங்கையில் நடைபெற்ற போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து விசாரணை மன்றம் அமைத்தல், காணாமல் போனவா்களைக் கண்டறிய அலுவலகம் அமைத்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், ராணுவம் வசம் உள்ள மக்களின் நிலங்களை விடுவித்தல் ஆகியவற்றை உடனடியாக இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. மனித உரிமை ஆணையத் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை அரசும், அதற்கு ஒப்புதல் தெரிவித்தது.

ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக ஐ.நா. தீா்மானம் முற்றாக செயற்படுத்தப்படவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த ராஜபட்ச அந்தத் தீா்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை பகிரங்கமாக அவமதிப்பதோடு, பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழா்களுக்கு நீதியை மறுக்கும் போக்காகும்.

ADVERTISEMENT

ஐ.நா. மனித உரிமை ஆணையரும், உலக நாடுகளும் இலங்கை அரசின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT