தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினி சார்பில் வழக்குரைஞர் உள்பட 3 பேர் விளக்கம்

25th Feb 2020 11:06 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் வழக்குரைஞர் உள்பட 3 பேர் நேரில் விளக்கம் அளித்து வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 15 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்தக் கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே போராட்டம் குறித்து சென்னை விமான நிலையத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை நேரில் விசாரணை நடத்த வேண்டும் என ஆணையத்திடம் பலர் கோரிக்கை விடுத்தனர். 

ADVERTISEMENT

அதன்படி ஒரு நபர் ஆணையத்தில் பிப்ரவரி 25ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் அவரது வழக்குரைஞர் உள்ளிட்ட 3 பேர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

விசாரணை முடிவடைந்து வெளியில் வந்த வழக்குரைஞர் இளம்பாரதி,  
நடிகர் ரஜினிகாந்த்துக்கு கேட்கப்படும் கேள்விகள் அடங்கிய பேப்பரை ஒரு கவரில் வைத்து சீல் வைத்தபடி ஆனையம் வழங்கி உள்ளது. இதனை நடிகர் ரஜினிகாந்த்திடம் ஒப்படைக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT