தமிழ்நாடு

பல்லடம் வங்கிக் கொள்ளையைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் 

25th Feb 2020 03:14 PM

ADVERTISEMENT

 

பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் நடத்தக் கொள்ளைச் சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

திருப்பூர் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பகுதியில் ஸ்டேட் வங்கி கிளையில் சுமார் 12 கிலோவிற்கு மேல் தங்கம் மற்றும் ரொக்க பணம் நேற்று கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் இதனைக் கண்டித்து வங்கியில் நகை, பணம் வைத்திருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், வங்கியில் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கோரியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததைக் கண்டித்தும், தங்கள் நகை பணம் மீட்கக் கோரியும் வங்கியின் முன்பு பல்லடம் - தாராபுரம் சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT