தமிழ்நாடு

கோத்தகிரி மார்கெட் பகுதியில் இன்று அதிகாலை தீ

25th Feb 2020 09:10 AM

ADVERTISEMENT

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11-க்கும் மேற்பட்ட மளிகை மற்றும் பழக்கடைகள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் என கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், மார்கெட் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்தினைத் தொடர்ந்து கோத்தகிரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதால் கோத்தகிரி பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT