தமிழ்நாடு

சிலைக்கடத்தல் வழக்குகளில் ஆவணங்கள் மாயம்: யானை ராஜேந்திரன் வழக்கு

25th Feb 2020 03:04 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பான 41 வழக்குகளில் ஆவணங்கள் மாயமானதாகக் கூறி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சிலைக் கடத்தல் தொடர்பாக 41 வழக்குகளில் ஆவணங்கள் மாயமானதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போதுதான் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியதை அடுத்து, மார்ச் 31க்குள் தமிழக அரசு முதன்மைச் செயலர், காவல்துறை டிஜிபி ஆகியோர் சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமானதா? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT