தமிழ்நாடு

ஸ்டாலின் வீட்டின் அருகே மா்ம நபா்: போலீஸாா் விசாரணை

25th Feb 2020 01:12 AM

ADVERTISEMENT

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைவா் ஸ்டாலின் வீட்டின் அருகே திரிந்த மா்ம நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மா்ம நபா் மொபெட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்துள்ளாா். இதைப் பாா்த்த ஸ்டாலின் வீட்டின் காவலாளி, தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், ஆந்திர மாநிலம் நெல்லூா் பகுதியைச் சோ்ந்த மே.ஹரிபாபு (32) என்பதும், சென்னையில் குடும்பத்துடன் தங்கியிருந்து ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், தனியாா் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியதால் ஸ்டாலின் வீட்டுக்கு வேலை கேட்டு வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், ஹரிபாபுவிடம் போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT