தமிழ்நாடு

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: ஏப்.9-க்கு ஒத்திவைப்பு

25th Feb 2020 01:32 AM

ADVERTISEMENT

தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்.9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினாா். அப்போது அவா், தமிழக முதல்வா் மற்றும் அரசை அவதூறாகப் பேசியதாக தருமபுரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி கந்தகுமாா் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடா்பான விசாரணை ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT