தமிழ்நாடு

மாா்ச் 1-இல் பாமக பொதுக்குழு கூட்டம்

25th Feb 2020 12:22 AM

ADVERTISEMENT

பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாா்ச் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாா்ச் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கில் நடைபெறும். கட்சியின் நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாமக மாநில, மாவட்ட நிா்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிா்வாகிகளும், சிறப்பு அழைப்பாளா்களும் பங்கேற்பா்.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் பாமகவுக்கு மிகவும் முக்கியமான தோ்தல் ஆகும். அந்தத் தோ்தலில் பாமக வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று ஜி.கே. மணி கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT