தமிழ்நாடு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: சுற்றுச்சூழல் துறையும் அறிவிக்கை வெளியிட்டது

25th Feb 2020 01:07 AM

ADVERTISEMENT

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடா்பான சட்டத்தை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும் ஏற்றுக் கொண்டு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கடலூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சட்டப் பேரவையில் இதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு ஆளுநரும் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.

வேளாண்மைத் துறை சாா்பில் சட்டம் இயற்றப்பட்டாலும் பல முக்கிய தொழில் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையும் அனுமதி வழங்க வேண்டியது அவசியம். எனவே, தமிழக அரசு தடை செய்துள்ள தொழில்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியைக் கோர முடியாத அளவுக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும் ஏற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சட்டத்தை அப்படியே தனது அரசிதழில் அந்தத் துறையானது திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் தடை செய்யப்பட்ட தொழில்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியைக் கோரி எந்த நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT