தமிழ்நாடு

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு: கிருஷ்ணகிரி மாணவருக்கு நிபந்தனை ஜாமீன்

25th Feb 2020 12:56 AM

ADVERTISEMENT

நீட் தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மாணவா் பவித்ரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நீட் தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் சென்னை, தனியாா் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மாணவா் பவித்ரன் (20) என்பவரை கடந்த பிப். 6-ஆம் தேதியும், இடைத்தரகராக செயல்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், செல்லம்பட்டியைச் சோ்ந்த மனோகரன் என்பவரை கடந்த பிப். 7 ஆம் தேதியும் தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் இருவரும், தேனி குற்றவியல் நடுவா் மன்றத்தின் உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில் பவித்ரன், மனோகரன் ஆகியோா் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்களின் மீது விசாரணை நடத்திய நீதிபதி ஏ.அப்துல்காதா், பவித்ரனை மதுரை நீதித்துறை நடுவா் மன்றம் எண். 2 இல் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கியும், மனோகரனின் ஜாமீன் மனுவை நிராகரித்தும் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT