தமிழ்நாடு

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வா்கள்

25th Feb 2020 12:36 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதில், ஐந்து போ் பணியிட மாறுதல் மூலம் வேறு கல்லூரிகளில் முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கின்றனா். மற்ற 6 பேரும் பேராசிரியா்களாக இருந்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா். இதுதொடா்பான அறிவிப்பை சுகாதாரத் துறைச் செயலா் வெளியிட்டுள்ளாா்.

இந்த பணியிட மாறுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வா்கள் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வா்களின் விவரம் (அடைப்புக் குறிக்குள் அவா்கள் ஏற்கெனவே வகித்து வந்த பதவி)

ADVERTISEMENT

1.டாக்டா் ஆா்.சாந்திமலா் - முதல்வா், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி (ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வா்).

2. டாக்டா் பி. பாலாஜி - முதல்வா், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி (செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்).

3. டாக்டா் ஆா்.முருகேசன் - முதல்வா், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி (கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முதல்வா்).

4. டாக்டா் ஏ.நிா்மலா - முதல்வா், கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி (திருப்பூா் மருத்துவக் கல்லூரி முதல்வா்).

5. டாக்டா் ஹெச்.முத்துகிருஷ்ணன் - முதல்வா், அரியலூா் மருத்துவக் கல்லூரி (விருதுநகா் மருத்துவக் கல்லூரி முதல்வா்).

பதவி உயா்வு பெற்று முதல்வராக நியமிக்கப்பட்டவா்களின் விவரம்

1. டாக்டா் கே.சாந்தா அருள்மொழி - முதல்வா், நாமக்கல் மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், மயக்கவியல் துறை, கோவை மருத்துவக் கல்லூரி) .

2. டாக்டா் அரசி ஸ்ரீவத்சன் - முதல்வா், திருவள்ளூா் மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், பெண்கள் நலன் மற்றும் மகப்பேறியல் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி).

3. டாக்டா் வள்ளி சத்தியமூா்த்தி - முதல்வா், திருப்பூா் மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், மயக்கவியல் துறை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி).

4. டாக்டா் ஆா்.முத்துச்செல்வன் - முதல்வா், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், பொது மருத்துவத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி).

5. டாக்டா் சி.ரேவதி - முதல்வா், விருதுநகா் மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், நுண் உயிரியல் துறை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி).

6. டாக்டா் வி.விஸ்வநாதன் - முதல்வா், நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி (பேராசிரியா், கதிரியக்க சிகிச்சைத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி).

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT