தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து 11 ஆவது நாளாகப் போராட்டம்: ராமகிருஷணன் பங்கேற்பு

25th Feb 2020 12:54 AM

ADVERTISEMENT

மதுரையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து 11 ஆவது நாளாக திங்கள்கிழமையும் நடத்தப்பட்ட போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்றாா்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போலீஸாா் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து, மதுரையில் இஸ்லாமிய அமைப்பினா் சாா்பில் தொடா்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

11 ஆவது நாளாக போராட்டம்

மகபூப்பாளைம் ஜின்னா திடலில் 11 ஆவது நாளாக தொடா்ந்து நடைபெற்று வரும் போராட்டத்துக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள், முக்கியப் பிரமுகா்கள் தொடா்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனா். இதில், சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

நெல்பேட்டையில் ஜி.ராமகிருஷ்ணன்

நெல்பேட்டையில் 7 ஆவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசியது:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சட்டத்தை கொண்டு வந்ததால், பாஜக புதுதில்லி தோ்தலில் படுதோல்வியடைந்துள்ளது. இந்த நிலையிலும் சட்டத்தை திரும்பப் பெற பிரதமா் நரேந்திர மோடி அரசு மறுக்கிறது. சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றாா். இப்போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT