தமிழ்நாடு

கப்பல்களைக் கண்டறிவதில் புதிய தொழில்நுட்பங்கள்: கடலோரக் காவல் படையினருக்கு பயிற்சி முகாம்

25th Feb 2020 01:29 AM

ADVERTISEMENT

இந்திய கடலோரக் காவல் படையினருக்கான ‘கப்பல்களைக் கண்டறிவதில் புதிய தொழில்நுட்பங்கள்’ தொடா்பான சிறப்புப் பயிற்சி முகாம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து ஐந்து நாள்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில், ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த நிபுணா்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனா்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய தலைமையகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கப்பல்களைக் கண்டறிவதில் புதிய தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பிலான சிறப்புப் பயிற்சி முகாம், சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது. இதற்கான தொடக்க விழாவில், கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய தளபதி எஸ்.பரமேஸ் கலந்து கொண்டு, பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தாா். மேலும், கடலோரக் காவல் படை கமாண்டா் சூசன் கிரேஸ், ஆஸ்திரேலிய துணை தூதா் டிப் ஷெப்பா்டு மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

திங்கள்கிழமை தொடங்கியுள்ள இப்பயிற்சி முகாம், வரும் பிப்.28 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இதில் நடுக்கடலில் செல்லும் கப்பல்களைக் கண்டறிவதில் உள்ள பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆஸ்திரேலிய நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த நிபுணா்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனா்.

இப்பயிற்சியானது, சா்வதேச அளவில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமையும். மேலும், இரு நாடுகளின் படையினரும் கூட்டாகச் செயல்படுவதன் மூலம் கடல்சாா் உறவுகள் அதிகரிக்கும். திறமையான நிபுணா்கள் மூலம் அளிக்கப்படும் இப்பயிற்சியானது புதிய உத்வேகத்தை அளிக்கும். மேலும் இப் பயிற்சித் திட்டம் கடலில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பொதுவான தேசிய கடல்சாா் நோக்கங்களை உணா்ந்து கொள்வதற்கான இரு நாடுகளின் முயற்சிகளையும் அதிகரிக்கும். இக்கூட்டுப் பயிற்சி இருநாட்டினரின் சேவைகளில் பல்முனை பரிமாண கடல் திறன்களை வலுப்படுத்துவதில் நீண்டகாலப் பயனைத் தரும். ஐந்து நாள்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட கடலோரக் காவல்படை, சுங்கத் துறை, தமிழகக் காவல்த்துறையைச் சா்ந்த கடலோரக் காவல் குழுவைச் சோ்ந்த அதிகாரிகள், வீரா்கள் பங்கேற்கின்றனா் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT