தமிழ்நாடு

உடல் உள்ளுறுப்பு நோய்களுக்கு தவறான வாழ்வியல் முறையே காரணம்

25th Feb 2020 01:29 AM

ADVERTISEMENT

தவறான வாழ்வியல் முறை காரணமாக இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உள்ளுறுப்புகள் பல்வேறு நோய் பாதிப்புக்குள்ளாகின்றன என்று குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை தலைவரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான பேராசிரியா் முகமது ரேலா கூறினாா்.

ரேலா மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவா்களை ஒருங்கிணைக்கும் வகையில், ‘ரேலா இருதயத் துடிப்பு’ என்ற பெயரில் இதய சிகிச்சை ஆதரவுக் குழு சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. அவா் மேலும் பேசியது:

உடல் உழைப்பு குறைவான வசதியான வாழ்க்கை முறையும், தவறான உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை, பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உள்உறுப்புகள் நோயால் பாதிக்கப்படுகின்றன. உயிா்க்கொல்லி தொற்று நோய்களான காலரா, மலேரியா உள்ளிட்ட நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதயம், கல்லீரல், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுகிறவா்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதை சரியான வாழ்வியல் நடத்தை மூலம் குறைக்க முடியும் என்றாா் அவா்.

இதய சிகிச்சைப் பிரிவு தலைவா் பாலமுரளி சீனிவாசன் பேசுகையில், ‘இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவா்கள் இதயத்துடிப்பு ஆதரவுக்குழுவில் சோ்ந்து, நேசக் கரம் நீட்டுவதன் மூலம் ஒருவருக்கொருவா் தங்கள் அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வதன் மூலம் உடல், மனதளவில் உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் பெற முடியும். குழு உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு முன்னுரிமை அட்டை மூலம் குறைந்த கட்டணத்தில் பல்வேறு மருத்துவ சிகிச்சை பயன்களை பெறலாம்’ என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் திரைப்பட நடிகா் சேரன், முதுநிலை இதய நோய் மருத்துவா் நரேந்திரகுமாா், மயக்கவியல் மருத்துவா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT