தமிழ்நாடு

ஸ்டாலின் தலைமையில் 29-ஆம் தேதி எம்பி-க்கள் கூட்டம்

22nd Feb 2020 09:36 PM

ADVERTISEMENT


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், 29-2-2020 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT