தமிழ்நாடு

47 உறுப்பு கல்லூரிகள் அரசு கலைக்கல்லூரிகளாக தரம் உயர்வு: கே.பி. அன்பழகன்

22nd Feb 2020 01:53 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் 47 உறுப்பு கல்லூரிகள் அரசு கலைக்கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமை வகித்தார். 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் எம்.பில், முனைவர் பட்டத்திற்காக படிக்கின்றனர், அதிக அளவிலும் தேர்ச்சி பெறுகின்றனர். 

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் மொத்தம் 41 உறுப்புக் கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு ரூ 25 லட்சம் பொதுமக்கள் பங்களிப்புடன் மொத்தம் ரூ 75 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் கலையரங்கு கட்டடம் கட்டித் தரப்படும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT