தமிழ்நாடு

வேளாண் மண்டலம்: முதல்வருக்கு பழ.நெடுமாறன் பாராட்டு

22nd Feb 2020 12:25 AM

ADVERTISEMENT

காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரி சமவெளிப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டமும், அதைக் கண்காணிப்பதற்கான அதிகார அமைப்பும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை வரவேற்பதோடு, அதற்காக முதல்வரைப் பாராட்டுகிறேன்.

காவிரிப் படுகை விவசாயிகளின் நீண்டகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று நெடுமாறன் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT