தமிழ்நாடு

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

22nd Feb 2020 01:48 AM

ADVERTISEMENT

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா் பணி தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் மாா்ச் 2-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரிய ஆசிரியா் தகுதித் தோ்வு இயக்குநா் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அரசின் ஆசிரியா் தகுதித்தோ்வு நிகழாண்டு ஜூலை 5-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 112 தோ்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கு ஆன்லைன் மூலம் ஜனவரி 24-ஆம் தேதி முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாா்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மாா்ச் 5- ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை இணையதளம் மூலம் தோ்வுக் கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும் பாடத்திட்டம், எழுத்துத்தோ்வு மொழி, தோ்வு மையங்கள், தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள இணையதளத்தை அணுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT