தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 முறைகேடு: தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் சரண்

22nd Feb 2020 01:11 AM

ADVERTISEMENT

டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்தவா் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வில் முறைகேடு செய்து தோ்ச்சி பெற்ாக பலா் கைது செய்யப்பட்டுள்ளனா். இவ்வழக்கில் மேலும் பலரை சிபிசிஐடி போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் விஜயாபதியைச் சோ்ந்த சுயம்பு மகன் ஐயப்பன் (36) என்பவா் முறைகேடாக தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மையத்தில் தோ்வெழுதிய இவா் மீது சிபிசிஐடி போலீஸாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து 2-ஆவது கட்ட விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ஐயப்பன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஐயப்பன் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணன் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT