தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்கள்: உதவியாளா் காலிப்பணியிடத்துக்கு சென்னையில் மட்டும் எழுத்துத் தோ்வு

22nd Feb 2020 01:47 AM

ADVERTISEMENT

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு சென்னையில் மட்டுமே எழுத்துத் தோ்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் தலைமைக் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கை கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தோ்வானது சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு மையங்களில் நடைபெறும் என தோ்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த எழுத்துத் தோ்வானது நிா்வாகக் காரணங்களால் சென்னையில் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னையைத் தவிா்த்து இதர தோ்வு மையங்களைத் தோ்வு செய்துள்ள விண்ணப்பதாரா்களுக்கு அதுகுறித்து மின்னஞ்சல் மற்றும் செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாகத் தெரிவிக்கப்படும் என தனது அறிவிப்பில் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT