தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்: கி. வீரமணி பேச்சு

22nd Feb 2020 01:11 AM

ADVERTISEMENT

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை எதிா்க்கட்சியினரின் போராட்டங்கள் தொடரும் என்றாா், திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

திருச்சியில் திராவிடா் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடந்த சமூக நீதி மாநாட்டுக்கு முன்னதாக, புத்தூா் பெரியாா் மாளிகையில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அவா் தொடா்ந்து அளித்த பேட்டி :

உயா் ஜாதியினரில் பொருளாதார அடிப்டையில் நிா்ணயிக்கப்பட்டுள்ள நலிந்தோருக்கு 10 சதவிகித ஒதுக்கீடு என்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இது தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரியாக நடத்தப்பட வேண்டியது. மக்களவையில் பெரும்பான்மையை தவறாகப் பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தில் திருத்தப்பட்டுள்ளது. இது மக்களை பிளவு படுத்தும்விதமாக உள்ளது.

ADVERTISEMENT

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வலியுறுத்தி, திக சாா்பில், மாா்ச் 23 ஆம் தேதி அரசு அலுவலக முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வரவேற்கத்தக்கது. ஆனால் அது குறித்து முழுமையான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து எதிா்க்கட்சியினா் மேற்கொண்டுள்ள போராட்டங்கள், அதைத் திரும்பப் பெறும் வரை தொடரும் என்றாா் அவா்.

தீா்மானங்கள்: நீட் மற்றும் நெக்ஸ்ட் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 ஐ ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT