தமிழ்நாடு

கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 6 பேர் கைது.

DIN

சூலூர்: சூலூர் அருகே அரசூரில் கல்லூரி மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை சூலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் ஒரு செல்போன் மற்றும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

சூலூர் அருகே அரசூரில் வசிப்பவர் தனுஷ்கோடி மகன் தமிழ்ச்செல்வன்(21). இவர் கடந்த சனிக்கிழமை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் நடந்து வரும்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வந்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில் கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் மேற்பார்வையில் சூலூர் பட்ட ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சூலூர் காவல்துறையினர் கல்லூரி மாணவன் கொலை வழக்கு சம்பந்தமாக 6 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரி மாணவனிடமிருந்து செல்போனை மூன்று பேரும் பறித்ததாகவும் அப்போது மாணவன் செல்போனை தர மறுத்து நடைபெற்ற தகராறில் மாணவனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியதாக தெரிகிறது.  இதில் படுகாயமடைந்த மாணவன் தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சூலூர் காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர் அவர்கள் விவரம் வருமாறு: கோவை மசகாலிபாளையம் பெரியார் நகரை சேர்ந்த ராஜு என்பவரின் மகன் மோகன்(21),  இவர் கஞ்சா வழக்கில் ஏற்கனவே நாலு முறை சிங்காநல்லூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  வெள்ளலூர் இடையே பாளையம்  பட்டேல் வீதியைச் சேர்ந்த சந்தானம் மகன் சதீஷ்குமார் (20).  வெள்ளலூர் வீரமாத்தி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ராதா என்பவரின் மகன் விஜயகுமார்(21),  பீளமேடு அருகே உள்ள மசகாலிபாளையம் பெரியார் நகர் இரண்டாவது வீதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் சூர்யா(19) இவர் மீது ஏற்கனவே இரு வழக்குகள் உள்ளது அதில் ஒன்று சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  ஒண்டிப்புதூர் ஜல்லி கூலி வீதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் கணேஷ் வெற்றிவேல்(20),  வெள்ளலூர் ஜெயபிரகாஷ் வீதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரது மகன் மோகன்ராஜ்(18).  இவர்களை கைது செய்த சூலூர் காவல்துறையினர் தற்போது விசாரணை செய்து வருவதாக தெரிகிறது.

இவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒரு செல்போன் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கொலை செய்ததற்கான காரணம் செல்போன் பறிப்பா  அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தற்போது போலீசார் விசாரணை செய்து வருவதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT