தமிழ்நாடு

மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

21st Feb 2020 03:37 PM

ADVERTISEMENT

திமுக தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும், மாநில அரசையும் விமர்சித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கின் விசாரணை இனி அங்கு நடைபெறும் என கூறப்பட்டது.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT