சங்கரன்கோவிலைச் சேர்ந்த திமுக மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் அய்யாத்துரைப்பாண்டியனுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த திமுக மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் அய்யாத்துரைப்பாண்டியனுக்கு சொந்தமான விடுதிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் சென்னையைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அய்யாத்துரைப் பாண்டியனுக்கு சங்கரன்கோவில், நெல்லை. குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சொகுசு விடுதிகள், பங்களாக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.