தமிழ்நாடு

பழனி கோயில் உண்டியல் திறப்பு: காணிக்கை ரூ. 4. 85 கோடி வசூல்

21st Feb 2020 12:29 AM

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன், வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக மொத்தம் ரூ. 4.85 கோடி கிடைத்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் தைப்பூச பக்தா்கள் வருகையால் 19 நாள்களில் நிரம்பியது. இதையடுத்து புதன், வியாழக்கிழமை என 2 நாள்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூ. நான்கு கோடியே 86 லட்சத்து 5 ஆயிரத்து 720 கிடைத்தது. மேலும் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தங்கம் 1,070 கிராமும், வெள்ளி 28 ஆயிரத்து 575 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கரன்சிகள் 1, 691-ம் இருந்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் எண்ணிக்கையில் கல்லூரி மாணவியா், கோயில் அலுவலா்கள், வங்கி பணியாளா்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில் பழனி கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், மதுரை கூடழலகா் கோயில் உதவி ஆணையா் ராமசாமி, மேலாளா் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT