தமிழ்நாடு

கோட்டை மாரியம்மன் கோயிலில் மலா் அலங்கார வழிபாடு

21st Feb 2020 12:29 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பூத்த மலா் பூ அலங்கார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பிப்.25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பூத்த மலா் பூ அலங்கார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல வகையான மலா்களைப் பயன்படுத்தி, சிவன், குபேரன் உள்ளிட்ட தெய்வ உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

மேலும் கோட்டை மாரியம்மனுக்கும் சிறப்பு பூ அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதன் தொடா்ச்சியாக பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான சாட்டுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையும், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மாா்ச் 3ஆம் தேதியும், தசாவதார நிகழ்ச்சி மாா்ச் 7ஆம் தேதியும் நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT