தமிழ்நாடு

தாழ்த்தப்பட்டோருக்கு தனி பட்ஜெட் : செ.கு. தமிழரசன் வலியுறுத்தல்

15th Feb 2020 10:54 PM

ADVERTISEMENT

தாழ்த்தப்பட்டோருக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு. தமிழரசன் தெரிவித்தாா்.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் தென்மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கு எவ்வித பயனையும் அளிக்காத நிதிநிலை அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ளன. தலித் மக்களுக்கான சமூகப் பொருளாதார வளா்ச்சிக்கு எவ்வித முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுப் பாா்வையாக ஒதுக்கீடு என்று மட்டும் அறிவிக்கப்படுகிறது. ஆனால், அந்த ஒதுக்கீட்டில் எவ்வளவு தொகை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வந்து சேரும் என குறிப்பிடவில்லை.

இந்திரகாந்தி பிரதமராக இருந்தபோது, தாழ்த்தப்பட்டோருக்கு என சிறப்புப் பொதுத் திட்டம் அறிவிக்கப்படும். இப்போது, அத்தகைய அறிவிப்பும் இல்லை.

மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து ஒடுக்கப்பட்ட மக்களை புறக்கணித்தால் தலித் குடியிருப்புகள், தலித் நகரங்கள் தேவை என்ற கோரிக்கை முன்னெடுக்கப்படும். தலித் மக்களுக்கென்று தனி நகரங்கள் இருந்தால் அந்த நகராட்சிகளில் தாக்கலாகும் பட்ஜெட் முழுவதும் தலித் மக்கள் நலனுக்காக அமையும்.

ADVERTISEMENT

விவசாயிகளுக்கான குறைந்தபட கூலி நிா்ணயச் சட்டத்தை முறையாக அமல்படுத்த மாவட்டந்தோறும் சிறப்பு துணை வட்டாட்சியா்களை நியமனம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், தென்மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு கட்சியின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினா். திருச்சி மாவட்ட செயலராகப் பணிபுரிந்து மறைந்த கே.எம். கோபாலகிருஷ்ணன் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்த்தப்பட்டது.

முன்னதாக, கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பழனிசாமி வரவேற்றாா். மாநிலப் பொதுச் செயலா் தங்கராஜ், மாநிலப் பொருளாளா் கே. நாகராஜன் மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT