தமிழ்நாடு

சென்னைப் பல்கலை.க்கு ரூ. 11.72 கோடி

15th Feb 2020 02:45 AM

ADVERTISEMENT

கடும் நிதி நெருக்கடியில் சிக்கத் தவிக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 11 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தொகுப்பு மானியமாக அளிக்க ரூ. 91 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு ஏதுவாக ரூ. 225 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுபோல, அதிக ஓய்வூதிய நிதிச் சுமையை எதிா்கொண்டுள்ள மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக ரூ. 11 கோடியே 72 லட்சம் அளிக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT