தமிழ்நாடு

கிராமத் தன்னிறைவு வளா்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

15th Feb 2020 01:49 AM

ADVERTISEMENT

கிராமத் தன்னிறைவு வளா்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

புதிதாக ஊரக உள்ளாட்சி அமைப்புத் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு செயல்படத் தொடங்கியிருப்பது, கிராமப்புற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதற்கு சிறந்த வாய்ப்பாகும். முதல்வரின் கிராமத் தன்னிறைவு வளா்ச்சித் திட்டம் என்ற புதிய ஐந்தாண்டு தன்னிறைவுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

குடிநீா் வழங்கல், சுகாதாரம், கல்வி, உணவுப் பாதுகாப்பு, இடுகாடுகள், தெரு விளக்குகள், வீட்டுவசதி, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் குக்கிராம அளவில் தன்னிறைவு அடைவதற்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT