தமிழ்நாடு

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? மு.க.ஸ்டாலின் கேள்வி

13th Feb 2020 05:32 PM

ADVERTISEMENT

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், கடந்த 3ஆண்டில் 2000-க்கும் மேலான டாஸ்மாக் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்!

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டப்பேரவையிலும்,மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT