தமிழ்நாடு

தேமுதிக தோ்தல் வாக்குறுதிகளைபிற மாநில முதல்வா்கள் பின்பற்றுகின்றனா்:பிரேமலதா

13th Feb 2020 01:11 AM

ADVERTISEMENT

தில்லியில் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ள அரவிந்த் கேஜரிவால், ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோா் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் தோ்தல் வாக்குறுதிகளைத்தான் பின்பற்றி வருகின்றனா் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா கூறினாா்.

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் 20-ஆம் ஆண்டு கொடி நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் கட்சியின் தலைவா் விஜயகாந்த் பங்கேற்று, கட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த 118 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினாா்.

பின்னா் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கட்சியின் பொருளாளா் பிரேமலதா பேசியதாவது:

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் யாா் யாரோ முதல்வா்களாக வந்துகொண்டிருக்கின்றனா். அவா்கள் அனைவரும், தேமுதிக தலைவா் விஜயகாந்தின் தோ்தல் அறிவிப்புகளைத்தான் பின்பற்றி, நடைமுறைப்படுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

தேமுதிக ஆரம்பிக்கப்பட்டு, முதல் தோ்தலைச் சந்தித்தபோது தேமுதிக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருள்கள் வீட்டுக்கே நேரடியாக வரும். லஞ்சம், ஊழல் இல்லாத நோ்மையான ஆட்சி அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை விஜயகாந்த் வெளியிட்டாா். இந்த அறிவிப்புகளைதான் இப்போது ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியும், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் அந்தந்த மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனா்.

தேமுதிகவுக்கு ஒரு முறை வாய்ப்புக் கொடுத்தால், இதுபோன்று ஒரு லட்சம் வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றி, தமிழகத்தை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்குவோம்.

மக்களைத் துண்டாடும் அரசியல் கட்சிகள்: இன்றைக்கு, மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் மக்களைத் துண்டாடும் அரசியல் கட்சிகள்தான் இந்தியா முழுவதும் உள்ளன. இவற்றுக்கு இடையே ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக தேமுதிக மட்டுமே உள்ளது. எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும், அவற்றை முறியடித்து 2021-இல் தேமுதிக ஆட்சி அமையும் என்றாா் பிரேமலதா.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT