தமிழ்நாடு

சொத்து வரியை ஏன் உயர்த்தவில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி

13th Feb 2020 04:37 PM

ADVERTISEMENT

கடந்த 20 ஆண்டுகளாக சொத்து வரியை ஏன் உயர்த்தவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சொத்து வரியை வசூலிக்க விதிகளை வகுக்க மாநகராட்சிகளுக்கு உத்தரவிடக் கோரி விபிஆர் மேனன் எனபவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 20 ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாமல் அரசு தூங்கிக்கொண்டியிருக்கிறதா? எனக் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாதவர்கள் மேயர் பதவிக்கு மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் 20 ஆண்டுகளில் 4 முறை வரியை உயர்த்தி இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும் வரியை உயர்த்தாததால் வெளியூர்காரர்கள் சென்னையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் அப்போது குறிப்பிட்டனர். 

எனவே, இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.  
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT