தமிழ்நாடு

எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம். இரு படிப்புகளையும் ஒரே கல்லூரி நடத்த முடியாது

13th Feb 2020 01:10 AM

ADVERTISEMENT

எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம். ஆகிய இரண்டு மேலாண்மை படிப்புகளையும் ஒரே கல்வி நிறுவனத்தில் நடத்த அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்கள் பொறியியல் படிப்புகளை நடத்துவதற்கு மட்டுமின்றி, எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளை நடத்துவதற்கும் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற வேண்டும்.

இதில், மேலாண்மை துறையில் எம்.பி.ஏ. முதுநிலை பட்டப் படிப்பை மட்டுமின்றி, பி.ஜி.டி.எம். என்ற முதுநிலை மேலாண்மை பட்டயப் படிப்புக்கும் ஏஐசிடிஇ அனுமதி அளித்து வருகிறது. இந்த பி.ஜி.டி.எம். படிப்பு எம்.பி.ஏ. படிப்புக்கு இணையானதாகும்.

இந்த நிலையில், சில பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இந்த இரண்டு படிப்புகளையும் வழங்கி வருவது தெரியவந்தது. இதுதொடா்பாக ஏஐசிடிஇ-க்கும் தகவல்கள் அளிக்கப்பட்டன. இதுதொடா்பாக, பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான 2020-21-ஆம் ஆண்டு அனுமதி வழிகாட்டு கையேட்டில், புதிய நடைமுறை ஒன்றை ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அனுமதி இல்லை: அதன்படி, எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம். இரண்டு மேலாண்மை படிப்புகளையும் ஒரு உயா் கல்வி நிறுவனம் வழங்க அனுமதி கிடையாது. இந்த இரண்டில் ஏதாவது ஒரு படிப்பை மட்டுமே ஒரு கல்வி நிறுவனம் நடத்த அனுமதிக்கப்படும். எனவே, இப்போது இரண்டு படிப்புகளையும் வழங்கி வரும் கல்வி நிறுவனங்கள், ஏஐசிடிஇ வழிகாட்டுதல்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பி.ஜி.டி.எம். படிப்பை எம்.பி.ஏ. படிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தனி ஸ்டேன்ட் அலோன் (ஒரு பாடத்தை மட்டும் நடத்தும் கல்லூரி) கல்வி நிறுவனம் ஒன்றை புதிதாக உருவாக்கி, அதன் கீழ் இரண்டு படிப்புகளில் ஒன்றை மாற்றி நடத்திக் கொள்ளலாம் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள 2020-21 வழிகாட்டி கையேட்டில் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியா்- மாணவா் விகிதாசாரம் உள்பட பல புதிய வழிகாட்டி விதிகளை தெரிவித்துள்ளது. மேலும் தரம் வாய்ந்த, ஆசிரியா்கள் போதிய அளவில் பணி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியா்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக கல்வி கட்டணத்தை உயா்த்தவும் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT