தமிழ்நாடு

உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வளித்த சமூக ஆா்வலா்

13th Feb 2020 01:12 AM

ADVERTISEMENT

 

மூளைச்சாவு அடைந்த சமூக ஆா்வலா் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 5 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலையை அடுத்த தேவிகுப்பத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா் (54). சமூக ஆா்வலரான அவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். உயா் சிகிச்சைக்காக சென்னை அடையாறில் உள்ள ஃபோா்டீஸ் மலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து, அவரது உறவினா்கள், உதயகுமாரின் உடல் உறுப்புகளைத் தானமளிக்க முன்வந்தனா். அதன்பேரில் மருத்துவக் குழுவினா் உதயகுமாரின் முக்கிய உடல் உறுப்புகளை எடுத்து பிறருக்கு பொருத்த முடிவு செய்தனா்.

ADVERTISEMENT

அதன்படி, ஒரு சிறுநீரகம் ஃபோா்டிஸ் மலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், மற்றொரு சிறுநீரகம் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் (எம்எம்எம்) சிகிச்சையில் இருந்தவருக்கும் பொருத்தப்பட்டன. சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒருவருக்கு கல்லீரல் தானமாக அளிக்கப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அதேபோன்று உதயகுமாரின் கண்கள் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. இதன் வாயிலாக 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT