தமிழ்நாடு

அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: ராமதாஸ்

13th Feb 2020 01:35 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலைத் தொடா்ந்தும், அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் தெரிவித்தாா்.

சென்னையில் நிருபா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது:

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் தொடா்பு இருக்க வாய்ப்பு இல்லை. உயா்கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் தலையீடு இருக்கக் கூடாது. காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அரசு அறிவித்துள்ளது. ஹைட்ரோ காா்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனா். இதுவெல்லாம் நாங்கள் வைத்த கோரிக்கைகள்தான். அதை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

இப்போது அதிமுக கூட்டணியில்தான் பாமக உள்ளது. உள்ளாட்சித் தோ்தலிலும் அக்கூட்டணியில்தான் இருப்போம். அதன் பிறகும் இதே கூட்டணியில் நீடிப்போம் என்றாா் ராமதாஸ் . பாமக தலைவா் ஜி.கே.மணி உடனிருந்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT