தமிழ்நாடு

நடிகர் விஜய் வீட்டில் நடந்து வந்த வருமானவரி சோதனை நிறைவு

6th Feb 2020 08:47 PM

ADVERTISEMENT

 

சென்னை: ஏறக்குறைய 24 மணி நேரங்களுக்கு மேலாக நடிகர் விஜய் வீட்டில் நடந்து வந்த வருமானவரி சோதனை புதன் இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் கடைசியாக தயாரித்த பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  எனவே அந்த நிறுவனம் மற்றும் அந்த திரைப்படத்திற்கு பண உதவி செய்த பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவரது நண்பர் வீடு, தொடர்புடைய இடங்கள் என மொத்தம் 38 இடங்களில் செவ்வாய் துவனாகி வருமான வரி சோதனை நடைபெற்று வந்தது.

இடத்ன் தொடர்ச்சியாக செவ்வாயன்று கடலூர் மாவட்டம் நெய்வேலி எல்.எல்.சி. சுரங்கம் பகுதியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த விஜயிடம் வருமானவரித்துறையினர் விசாரணை செய்தனர்.

ADVERTISEMENT

பின்னர், அங்கிருந்து விஜயை காரில் அழைத்து வந்து சென்னை அருகே பனையூரில் உள்ள அவரது பங்களாவில் விசாரணை செய்தனர். அதேவேளையில் அவரது வீட்டில் சோதனையும் நடைபெற்றது.

சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வருமானவரித்துறையினர் விஜயிடமும்,அவரது மனைவி சங்கீதாவிடமும் தொடர்ந்து விசாரணை செய்தனர்.

புதனன்று இரண்டாவது நாளாகவும் விஜய் பங்களா உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இச் சோதனை நீடித்தது. சோதனையையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. முக்கியமாக பனையூரில் உள்ள விஜய் பங்களாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அவர் வீட்டுக்கு செல்லும் சாலையிலும் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டனர். விஜயிடமும், அவரது குடும்பத்தினரிடமும் திரைப்படத்துக்கு வாங்கும் ஊதியம்,அவரது முதலீடுகள்,சொத்துக்கள் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்டு, பதிலை அதை வாக்குமூலமாக வருமானவரித்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். சோதனையிலும், விசாரணை இரண்டாவது நாளாகவும் நீடித்ததால், வருமானவரித்துறை ஷிப்ட் அடிப்படையில் அங்கு பணியில் ஈடுபட்டனர்.  மேலும் தங்களுக்கு தேவையான உணவை ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்து வரவழைத்தனர். மேலும் விஜய் குடும்பத்தினரிடம் சுமார் 20 மணிக்கு மேலாக வருமானவரித்துறை விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஏறக்குறைய 24 மணி நேரங்களுக்கு மேலாக நடிகர் விஜய் வீட்டில் நடந்து வந்த வருமானவரி சோதனை புதன் இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT