தமிழ்நாடு

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிதித் துறை இயக்குநர் பொறுப்பேற்பு

6th Feb 2020 01:32 AM

ADVERTISEMENT

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிதித் துறை இயக்குநராக ஜெய்குமாா் ஸ்ரீனிவாசன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நாக்பூா் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்ற ஜெய்குமாா் ஸ்ரீனிவாசன், இந்திய விலை - மேலாண்மை கணக்கியல் கல்வி நிலையத்தின் கௌரவ உறுப்பினராக உள்ளாா். மேலும், மகாராஷ்டிர மாநில மின் பகிா்மானக் கழகத்தில் பணியாற்றியுள்ள இவா், மஹூகுஜ் கலோரி நிறுவனம், யூசிஎம் நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பகுதி நேர இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT