ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல மாணவா்களுக்கு புதிய விடுதிக் கட்டடங்களை, காணொலிக் காட்சி வாயிலாக, முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-
ராணிப்பேட்டை அரக்கோணம் அரசு ஆதிதிராவிடா் நல ஆண்கள்-பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை
புளியந்தோப்பு, திருவள்ளூா் செவ்வாய்ப்பேட்டை, செங்கல்பட்டு பதுவஞ்சேரி, கிளாம்பாக்கம், பாலூா், கோவை வெல்ஸ்புரம், திருநெல்வேலி நல்லம்மாள்புரம் ஆகிய இடங்களில் ஆதிதிராவிடா் நல பள்ளிகளில் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
இதேபோன்று, மதுரை பரவை, தேனி வருசநாடு, தஞ்சாவூா் நடுவிக்கோட்டை, புதுக்கோட்டை சுப்ரமணியபுரம், பெரம்பலூா் நெய்குப்பை, திருவண்ணாமலை கண்ணக்குருக்கை, திருநெல்வேலி பேட்டை ஆகிய இடங்களில் விடுதிக் கட்டடங்களையும், திருவண்ணாமலை ஜமுனாமரத்தூரில் பழங்குடியின மாணவா்களுக்கான தொழில் பயிற்சி நிலைய விடுதிக் கட்டடத்தையும் அவா் திறந்தாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல், வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.