தமிழ்நாடு

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் புறக்கணிப்பு: ஸ்டாலின் கண்டனம்

4th Feb 2020 08:38 PM

ADVERTISEMENT

 

சென்னை: இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இன்று இலங்கை சுதந்திரதினத்தில், வழக்கமாக இசைக்கப்பட்டு வந்த முறையின்படி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப் பட்டிருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இலங்கை அதிபரின் "சிங்களப் பேரினவாதத்திற்கு" தமிழ் மொழியும், தமிழர்களின் உணர்வும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதை மத்திய பா.ஜ.க அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது

இந்தியா வந்த இலங்கை அதிபரை வரவேற்று - நிதியுதவியும் அறிவித்து பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வழியனுப்பி வைத்தது இலங்கையில் வாழும் தமிழர்களின் கண்ணியத்தைச் சிதைத்து- சிங்களவர்களுக்கு அடிமைகளாக்குவதற்கா? என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள், தமிழ் மொழி சம்பந்தப்பட்ட உணர்வு பூர்வமான இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, "இலங்கை சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாததற்கு இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து, கண்டனம் தெரிவிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT