தமிழ்நாடு

காங்கிரஸ் மூத்த தலைவரின் மகன் பாஜகவில் இணைந்தார்!

4th Feb 2020 05:01 PM

ADVERTISEMENT

 

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் திவிவேதியின் மகன் சமீர் திவிவேதி பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியில் இணைந்தார். 

ஜனார்த்தன் திவிவேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார். 

தனது மகன் சமீர் திவிவேதி அவரது சொந்த விருப்பத்தின் பேரிலேயே பாஜகவின் இணைந்ததாக ஜனார்த்தன் திவிவேதி கூறியுள்ளார். 

ADVERTISEMENT

சமீர் திவிவேதி இதுகுறித்து கூறுகையில், 'நான் முதன்முறையாக ஒரு அரசியல் கட்சியில் இணைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் பணிகள் என்னை ஈர்த்ததால் நான் பாஜகவைத் தேர்வு செய்தேன்' என்று தெரிவித்துள்ளார். 

Tags : பாஜக
ADVERTISEMENT
ADVERTISEMENT