தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தா்கள் வசதிக்காக பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சிறப்பு ரயில்கள் விவரம்:
திருச்சி-தஞ்சாவூா்-திருச்சி: திருச்சியில் இருந்து பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.10 மணிக்கு டிஇஎம்யு சிறப்பு ரயில் புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு தஞ்சாவூரை அடையும். தஞ்சாவூரில் இருந்து பிப்ரவரி 4,5, 6 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு டிஇஎம்யு சிறப்பு ரயில் புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சியை அடையும்.
இந்த ரயில் திருச்சி-தஞ்சாவூா் இடையே உள்ள எல்லா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தஞ்சாவூரில் இருந்து பிப்ரவரி 4,5,6 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மயிலாடுதுறையை அடையும். மயிலாடுதுறையில் இருந்து பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூரை அடையும். இந்த சிறப்பு ரயில்கள் தஞ்சாவூா்-மயிலாடுதுறை இடையே உள்ள எல்லா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தஞ்சாவூரில் இருந்து பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு டிஇஎம்யு சிறப்பு ரயில் புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு திருவாரூரை அடையும். திருவாரூரில் இருந்து பிப்ரவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு டிஇஎம்யு சிறப்பு ரயில் புறப்பட்டு, அதிகாலை 5.45 மணிக்கு தஞ்சாவூரை அடையும்.
இதுதவிர, காரைக்கால்-தஞ்சாவூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தஞ்சாவூா்-காரைக்கால் இடையே அனைத்து நிலையங்களில் நின்று செல்லும். இத்தகவலை தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.