தமிழ்நாடு

திருப்பூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 800 காளைகள், 600 காளையர்கள் பங்கேற்பு

2nd Feb 2020 10:48 AM | தர்மலிங்கம்

ADVERTISEMENT

 

திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 800 காளைகள் மற்றும் 600 காளையர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதனை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 800 காளைகள் மற்றும் 600 காளையர்கள் பங்கேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

காயம் ஏற்படும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஐந்து பேர்கொண்ட 7 மருத்துவ குழுக்கள், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இருசக்கர வாகனம், குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 

முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட பின்னர் பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளையை அடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 14 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த சிவகங்கையைச் சேர்ந்த தென்னவன் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவ வசதிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT