தமிழ்நாடு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திட்டமிடலில் உதவும் தமிழக இளைஞர்கள்: ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

2nd Feb 2020 05:21 PM

ADVERTISEMENT

 

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திட்டமிடலில்  ஒத்த கருத்துடைய தமிழக இளைஞர்கள் உதவிட தங்களுடன் இணைந்துள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துளார்.

ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு தேர்தல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலுக்காகவும், பிரசார உத்திகளுக்காகவும் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ.பி.ஏ.சி என்னும் அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்புதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் உத்திகளை வகுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திட்டமிடலில்  ஒத்த கருத்துடைய தமிழக இளைஞர்கள் உதவிட தங்களுடன் இணைந்துள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக ஸ்டாலின் ஞாயிறன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தமிழகம் இழந்த  புகழை மீட்கும் நம் குறிக்கோள் வெற்றி பெறவும், அதற்கான திட்டமிடலில் உதவிடவும், திறமைமிக்க, ஒத்த கருத்துடைய பல தமிழக  இளைஞர்கள், IPAC  - அமைப்பின் கீழ், நம்முடன் 2021 தேர்தலில் இணைந்து பணியாற்றிட இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT