தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் வரவேற்கத்தக்கது: கனிமொழி எம்பி

2nd Feb 2020 10:32 AM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பது மட்டும் வரவேற்கத்தக்கது என்று கனிமொழி எம்பி தெரித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கையெழுத்து இயக்கத்தை மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒன்றை வரவேற்க முடியும் என்றால் அது ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பது மட்டும் தான். அதைத் தவிற வேறு எதுவும் வரவேற்கும் விதமாக இல்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் தாக்கல் தெளிவாக இல்லை.

ADVERTISEMENT

எல்ஐசி தனியாருக்கு தாரைவார்க்ப்படும் என்றபோது நாடாளுமன்றமே அதிர்ந்துபோனது. மக்கள் நம்பக்கூடிய, அதிகம் சார்ந்து இருக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிச்சயமாக ஏற்க முடியாது. குறைந்தபட்சம் மத்திய அரசு இதையாவது திரும்பபெற வேண்டும் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT