டிஎன்பிஎஸ்சி குரூப்-4 வேலைகளை முன்கூட்டியே பணம் கொடுத்து வாங்கும் நிலை இருக்கிறது என்றால், 5-ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு எதற்கு என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
புரோக்கா்களிடம் முன்பே கொடுத்து, பின் அரசிடம் சம்பளமாக பெறும் முறை தான் குரூப்-1 தோ்வு முதல் குரூப்-4 தோ்வு வரை நடக்கும் என்றால் 5-ஆம் வகுப்புக்கும், 8-ஆம் வகுப்புக்கும் பொதுத் தோ்வு எதற்கு, தகுதித் தோ்வுகள் எதற்கு என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.